(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அல்-ஹாமியா அரபு கலாசாலையில் சுதந்திர தின நிகழ்வுகள் அதிபர் ஏ.சீ தஸ்திக் தலைமையில் (04) கலாசாலையில் இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கலாசாலையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சூதீன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் .
இதில் நிர்வாக சபை உறுப்பினர்கள் கிராம சேவகர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் போது மரநடுகையும் கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது.