இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷீறா சபையின் ஏற்பாட்டில் சமய நிகழ்வும், விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு.
இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷீறா சபையின் ஏற்பாட்டில் சமய நிகழ்வும், விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு மஜ்லிஸ் அஷ்ஷீறா சபையின் அமீர் அஷ்ஷேக் கே.எல். ஆதம்பாவா (மதனி) தலைமையில் இன்று சுபஹ் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை பத்ர் ஜீம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி முகம்மட் நஸீர், பள்ளிவாசலகள் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.