(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச சபையுடன் சம்மாந்துறை சமூக சேவைகள் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த 'பாதுகாப்பான தேசம் செழிப்பான நாடு' எனும் தொனிப்பொருளில்; 72வது சுதந்திர தின நிகழ்வு அப்துல் மஜீட் மண்டபத்திற்கு முன்பாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது தேசியக்கொடி ஏற்றி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் நினைவு கூறப்பட்டதுடன் பயன்தரு மரக்கன்றுகளும்; நடப்பட்டது. இதேவேளை வீதியில் பயணித்த வாகனங்களுக்கு தேசியகொடி வழங்கப்பட்டதுடன், பழமரக்கன்றுகளும் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் சுதந்திர தினத்தினை பிரதிபலிக்கும் வகையில் வீதி நாடகமும் இடம்பெற்றது.