தகவல் - Achimohamed Riyas RH
இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வும், சிரமதான நிகழ்வும் பள்ளிவாசல் வளாகத்தில் இன்று இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஜமாலியா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், உடங்கா 01 கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், EDO மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரக்கன்று நடப்பட்டு சிரமதானமும் இடம்பெற்றது.