Mohamed Nibras
இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று காத்தான்குடியில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. நாட்டின் தேசியத்தையும் இன ஒற்றுமையினையும் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
காத்தான்குடி நகரசபை,கா.குடி ப.மு.நி.சம்மேளனம்,கா.குடி ஜம்இய்யதுல் உலமா சபை,கா.குடி வர்த்தக சங்கம்,ஆட்டோ சாரதிகள் சங்கம்,சிவில் அமைப்புக்கள்,முன்பள்ளி பாடசாலைகள்,அரச பாடசாலைகள் மற்றும் மதரசாக்கள் இணைந்து நடாத்திய இச்சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்றார்.
இத்தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சுமனரத்ன தேரர்,வீகே சிவபாலன் குருக்கள், அஷ்செய்க் கபூர் மதனி, கா.குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர்(JP),பிரதி தவிசாளர் ஜெசீம்(JP), கா குடி சம்ம்மேளனத்தின் தலைவர் சத்தார்(BA), கா.குடி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி, கா.குடி நகரசபையின் செயலாளர் திருமதி ரிப்கா சபீன்(SLAS), கா.குடி நகரசபையின் உறுப்பினர்களான ரஊப் ஏ மஜீத்,கே.எல்.எம்.என்.பரீட்(JP),பெளமி(JP),ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸா,அஷ்சேய்க் மும்தாஸ் மதனி, மதகுருமார்கள், கா.குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் செயலாளர்கள்,உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.