சகா.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72வது சுதந்திர தின நிகழ்வு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (4) வலயக் கல்விப் பணிப்பாளர் சஹ்துல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வலயக் கல்விப் பணிப்பாளரினால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதோடு சுதந்திர தின நினைவாக மரங்கன்றுகளும் நட்டிவைக்கப்பட்டன.
அத்தோடு சம்மாந்துறை அல்-அஷ்ரக் மகாவித்தியாலயத்தின் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பை அன்பளிப்புச் செய்யப்பட்டன.