(எம்.என்.எம்.அப்ராஸ்)
72வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திரதின நிகழ்வுகள் அமைப்பின் ஸ்தாபக தலைவர் தானிஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் இன்று (04) இடம்பெற்றது.
இதில் அரசியல் பிரமுகர்கள் ,கல்விமான்கள் , அமைப்பின் அங்கத்தவர்கள் இளைஞர் யுவதிகள் , நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.