மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் ஸ்தாபகர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் கிழக்கு இளைஞர் அமைப்புக்கு தந்த வாக்குறுதியினை நிறைவேற்றினர்.
கடந்த 08.02.2020 ம் திகதி மாளிகைக்காடு பிஸ்மில்லா ஹோட்டலில் கிழக்கு இளைஞர் அமைப்பு உறுப்பினர்களுடான மாதாந்த ஒன்றுகூடலின் போது கிழக்கு இளைஞர் அமைப்புக்கும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும், அ.இ.ம.கா.பிரதி தேசிய அமைப்பாளரும், மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் ஸ்தாபகருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கும் இடையில் சிநேக பூர்வ சந்திப்பு நடைபெற்றது.
அந்த வாக்குறுதி அமைவாக இன்று (13) மெற்றோ பொலிட்டன் கல்லூரிக்கு
பொது செயலாளர் முஸ்தபா முபாறக் நேரடிய சென்று அமைப்பின் உயர் பீட உறுப்பினரும், இவ் வருடம் 2019 க.பொ.த (உ/த) பரீட்சையில் கலைப்பிரிவில் A, 02 B பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவான தன்ஸீம் (அல்-மனாரி) அவர்களுக்கு DIPLOMA IN COMPUTING பாட நெறிக்கான 100% இலவசமாக பயில்வதற்கு அனுமதியினை கல்முனை மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் நிலைய முகாமையாளர் (CENTRE MANAGER) SHAKTHIVEL KISHORAN இருந்து
பெற்றுக் கொள்ளப்பட்டது.
இச் சந்தர்ப்பத்தில் பூரண ஒத்துழைப்பு தந்த முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும், அ.இ.ம.கா.பிரதி தேசிய அமைப்பாளரும், மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் ஸ்தாபகருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கு நன்றிகள், அமைப்பின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முஸ்தபா முபாறக்
13.02.2020