Ads Area

டெல்லி கலவரத்தில் முஸ்லீம் வீடுகளுக்குள் ரசாயன வாயு செலுத்திய காவல் துறை.

முஸ்லீம் வீடுகளுக்குள் போலீசார் ரசாயன வாயுவை செலுத்தும் கோர காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வலைத்தளங்களில் உலா வருகின்றது இது டெல்லி கலவரத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் கலவரம் வெடித்த பகுதிகளில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள முஸ்லீம் வீடுகளுக்குள் போலீஸ் அதிகாரிகள் ரசாயன வாயுவை பீய்ச்சி அடித்தது போன்ற தகவலுடன், கோர காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ சமீபத்திய டெல்லி கலவரத்தின் போது எடுக்கப்பட்டதாக சமூக வலைதள பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. 39 விநாடிகள் ஓடும் வீடியோவிற்கு: "இதயத்தை பதற வைக்கும் சம்பவம். இந்த வீடியோ டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் எடுக்கப்பட்டதாகும். டெல்லி போலீசார் முஸ்லீம் வீடுகளுக்குள் ரசாயன வாயுவை பீய்ச்சி அடிக்கின்றனர். வீடுகளுக்குள் உள்ள குழுந்தைகள் அபாய நிலையில் உள்ளனர். குறைந்தபட்சம் குழந்தைகளை பற்றியாவது நினைத்து பார்க்க வேண்டும்." எனும் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த வீடியோ டெல்லி கலவரத்தின் போது எடுக்கப்பட்டதல்ல எனவும் சிலர் கருத்துச் தெரிவிக்கின்றனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe