Ads Area

நாங்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறோம் எங்களைத் தாண்டி முஸ்லிம்கள் மீது யாரும் கை வைக்க முடியாது.

நன்றி - நக்கீரன்

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. டெல்லியில் இந்த போராட்டம் கட்டுக்கடங்காத கலவரமாக மாறியிருக்கிறது. இந்த கலவரத்தினால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.   இது குறித்து பாஜக தேசிய செயலாலர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், 

டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட வேண்டும்’’என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில், எச்.ராஜாவின் பதிவுக்கு  கண்டனம் தெரிவித்துள்ளார். 

மாணவர்கள் மீது குண்டு விழும் என்றார்கள். சீமான் கறி கிடைக்கும் என்றார்கள். இப்போது டெல்லியில் நடந்தது போல தமிழகத்திலும் நடக்கும் என்கிறார்கள். சனநாயக வழியிலான அமைதியான அறப்போராட்டத்திற்கு மிரட்டல் விடுக்கிறார்கள். கை கால்களோடு மட்டுமல்ல வாளோடும் வேலோடும் முன் தோன்றிய மூத்தக்குடியின் மக்கள் நாங்கள்! நினைத்ததையெல்லாம் செய்து முடித்து கலவரம் செய்து ஆட்டம் போட இது வடநாடு அல்ல; தமிழ்நாடு!

எங்களது பெருந்தன்மையும் பொறுமையும்தான் உங்களது இருப்பை நிலை கொள்ளச் செய்திருக்கிறது!  இங்கிருக்கும் இஸ்லாமிய சொந்தங்கள் எங்கோ இருந்து வந்தவர்கள் அல்ல; காலங்காலமாக நீடித்து நிலைத்து வாழும் இம்மண்ணின் பூர்வகுடிகள்! எங்கள் உடபிறந்தவர்கள்; எங்களது இரத்த உறவுகள்! இஸ்லாமியர்கள் தமிழர்களாகவில்லை தமிழர்கள் நாங்கள் தான் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறோம்.  அவர்களைத் தொட வேண்டும் என்று நினைத்தால் அதற்குமுன் எங்களை எதிர்கொள்ள வேண்டும். எங்களைத் தாண்டி தான் அவர்களை நெருங்க முடியும்! கவனம்!

நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு! இதுல ஊளையிட்டுக்கிட்டே வேற வருதா?!’’
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe