சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு சபை கிடைத்ததை பெரு வெற்றியாக கொண்டாடிக்கொண்டிருந்தனர். மறு நாளே இது தொடர்பில் அரச அச்சுத் திணைக்கள இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டிருந்தது. இதில் ஏதோ பிரச்சினையுள்ளதென்பது வெளிப்படையாக தெரிந்தது. இதனை சாய்ந்தமருது முக்கியஸ்தர்களும் அறிந்திருந்தனர். இதனை மு.அமைச்சர் அதாவுல்லாஹ் நேரடியாக எங்காவது பெரிதாக தூக்கி பிடித்திருந்தாரா? இல்லையல்லவா? இதில் ஏதோ உள்ளதென்பது புலனாகவில்லையா?
பலரும் பல கோணத்தில் சிந்தித்தனர். அதில் ஒன்று எல்லைப் பிரச்சினையாகவும் இருந்தது. அதில் இன்றும் சிறிய பிரச்சினை உள்ளதென்பது நிதானமாக சிந்திப்போரால் ஏற்க முடியும். அது மிக இலகுவாக தீர்வை பெறக் கூடிய விடயமே! இருந்தும், தெளிவுபடுத்தப்பட வேண்டிய முக்கிய விடயம். இன்று கிடப்பில் போட்டால், நாளை அது பூதாகரமாக மாறும். அதனை ஏற்கும் மனோ நிலையில் மக்கள் இருந்திருக்கவில்லை. நான் சில நாட்கள் முன்பு அது தொடர்பான பதிவையிட்டது, அரசியல் சார்பற்ற சாய்ந்தமருது முக்கியஸ்தர்களின் கலந்துரையாடலின் பின்பே என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதனை வைத்து இப் பிரச்சினைக்குள் அதாவுல்லாஹ்வை இழுத்து போட்டு வேறு சில பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதும் அதன் நோக்காக இருந்தது. எல்லாம் நலவை நாடியதே!
இருந்தும் அரசியலே வாழ்வு என திரியும் வாழை மரத்தில் ஏற்றப்பட்ட பணத் திமிறு பிடித்தவர்கள் துள்ளிக் குதித்தார்கள். நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு பணம் பறித்து வர்த்தகம் செய்து வாழ்பவன் நானல்ல. இவர்களுக்கான பதில் விரைவில் வழங்கப்படும் என்பது நானறிந்ததே! நான் மாத்திரமல்ல. அது இன்று வந்துள்ளது. இந் நிலை வந்துவிடக் கூடாது என்பதே, அன்று எம் நோக்காக இருந்தது.
இவ் விடயத்தை அமைச்சரவை அனுமதி பெற்று செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என நான் கூற முடியாது போனாலும், அரசு தடுப்பதற்கு சிந்திக்க தாமதமாகியிருக்கும். அமைச்சரவை அனுமதி தேவையில்லை என அன்றைய கலந்துரையாடலின் போது கூறியவர் மு.அ அதாவுல்லாஹ். இப்போது இந் நிலை சாய்ந்தமருது மக்களுக்கு யாரால் ஏற்பட்டுள்ளதென புரிகிறதா?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
Thanks for Cartoon - Morning