உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய கொடிய உயிர்க் கொல்லி வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் உயிரிழப்புக்கள் இடம் பெற்றிருக்கிறது இவ் வைரஸ் தாக்குதல் சீனாவே அதிக தாக்குதலுக்கு ஆளாகி 2000 த்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை சந்தித்துள்ளது, பல ஆயிரம் பேர் சீனாவில் கொரனோ தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
உலகில் உள்ள பல்வேறு நாடுகள் இவ் வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது இந்த வகையில் சவுதி அரேபியாவும் தற்போது உம்ரா மற்றும் விசிட்டிங்கில் வருவதை தற்காலிகமாக தடை செய்துள்ளது, உம்ரா கடமைக்கான மற்றும் சவுதி அரேபியாவுக்கு விசிட் வருவதற்கான விசாக்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இது தற்காலிக தடைதான் என்றும் கொரனோ வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் எனவும் நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
செய்தி மூலம் - http://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.