தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியால் வேலை செய்வோருக்கான சம்மாந்துறை24 இணையத்தளத்தின் முக்கிய அறிவித்தல்.
சவுதி அரேபியாவில் கடந்த சில வாரங்களாக அதிரடி சோதனைகள் இடம் பெற்று வருகின்றது இச் சோதனை நடவடிக்கையில் உரிய ஆவணங்கள் இல்லாது சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் கடந்த சில வாரங்களாக அதிரடி சோதனைகள் இடம் பெற்று வருகின்றது இச் சோதனை நடவடிக்கையில் உரிய ஆவணங்கள் இல்லாது சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
வெளிநாட்டினர் அதிகமாக புலங்கம் பிரதேசங்களில் சவுதி பொலிஸார் அதிரடியாக களமிறங்கி சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர் ஆள் அடையாளங்களை காண்பிக்கத் தவறும் வெளிநாட்டினரை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பொலிசார் சோதனையில் ஈடுபடும் போது உங்களிடத்தில் இகாமா இல்லாது விட்டால் எந்தவித பாரபட்சமும் இன்றி உங்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள் பிறகுதான் உங்களது நிறுவனத்திற்கு அல்லது கபீலுக்கு அறிவித்தல் வழங்குவார்கள்.