கல்முனையை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு ஆப்புவைத்தார் பிரதமர் மஹிந்த..!
*(தயவுசெய்து இந்தக் கட்டுரையை முழுவதுமாக வாசித்துபாருங்கள் உண்மை புரியும்..)
கடந்தகாலங்களில் அரசியலுக்காக கல்முனையை வைத்து சதுரங்க ஆட்டம் ஆடியவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்ற உண்மையை ஒத்துக்கொண்டேயாகவேண்டும்...!
இதனை கல்முனைையை நேசிக்க அத்தனை உள்ளங்களும் பாராட்டியே ஆகவேண்டும்..!
கல்முனையில் இனரீதியான பி.செயலகங்கள் அமையமுடியாது என்பதை பிரதமர் அவர்கள் உறுதியாகவே கூறிவிட்டதுடன், கல்முனை என்பது முஸ்லிம்களின் தலைநகர் என்பதையும் உறுதிசெய்துள்ளதுடன், கல்முனை நகருக்கு பாதிப்பில்லாத முறையிலும், யாருக்கும் அநியாயம் நடந்துவிடாத முறையிலும் கல்முனையை நான்கு சபைகளாக பிரித்து தீர்வு காணப்படவேண்டும் என்பதிலும் பிரதமர் அவர்கள் உறுதியாகவே உள்ளார். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டே வருகின்றன...
இந்த நிலையில் சாய்ந்தமருது மக்களுக்கான தனியான சபைவேண்டும் என்ற கோரிக்கையும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுவிட்டது. அதில் எவ்வித மாற்றங்களுக்கும் இடம் இல்லையென்பதையும் உரியவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். சாய்ந்தமருதுக்கான நகரசபையானது விசேட வர்த்தமானி மூலம் வழங்கப்பட்டிருந்தாலும், அந்தச் சபையானது 2022 மார்ச் மாதமளவில்தான் நடைமுறைக்கு வரும் என்றேதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குள் கல்முனை பிராந்தியத்தின் எல்லைகள் கொமிசன் மூலம் இனம்காணப்பட்டு அதற்கான தீர்வும் பெறப்பட்டதன் பின் மூன்று சபைகளாக பிரிக்கப்படும் என்பதோடு 2022ல் சாய்ந்தமருது உட்பட நான்கு சபைகளுக்கும் சேர்த்தே உள்ளூராட்சிசபை தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வேண்டுகோளும் என்னமும் ஆகும்...
இந்த விடயத்தின் அடிநுணி தெரியாத இனவாதிகளுக்கு அவர்களுடைய வாய்க்கு அவல் கிடைத்தது மாதிரியான விடயமாகவே மாறியிருந்தது. அவர்கள் இதனைவைத்து கூப்பாடுபோட துவங்கிவிட்டார்கள். இனவாதிகளின் செயல்பாடு ஒருபுறமிருக்க பாராளுமன்றத்திலே இருக்கும் தங்களுடைய சகாபாக்களுக்கும் இதனை எத்திவைத்து இதனை பூதாகரப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்கள். அதனை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிக்காவும், மரைக்காரும் பாராளுமன்றத்திலே அதற்கான தங்களுடைய பங்களிப்பை கனகட்சிதமாக நிறைவேற்றி கொடுத்தார்கள் எனலாம்.
இப்போது விடயத்துக்கு வருவோம்...கல்முனையை வைத்து அரசியல்செய்து வந்த அரசியல்வாதிகளுக்கு (அது தமிழ் முஸ்லிமுமாக இருக்கலாம்) கல்முனை விடயமானது பிரதமர் மஹிந்த அவர்களின் மூலம் தீர்வுக்கு வந்ததை ஜீரணிக்கமுடியாமல் போய்விட்டது என்றே கூறவேண்டும். இதன் மூலம் அதாவுள்ளா அவர்களும் ஹீரோ ஆகிவிட்டாரே என்ற ஆதங்கமும் கூடிவிட்டது. இந்த பெறாமைதான் இந்தளவு சாய்ந்தமருது பிரச்சினையானது பூதாகரமானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இதற்கு பின்னாலிருந்து செயல்பட்டவர்கள் யாரென்பது இந்தக் கட்டுரையை வாசித்து முடித்ததன் பின் அறிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றேன். இந்த நாசகார சக்திகள்தான் கடந்தகாலங்களில் கல்முனையை வைத்து சித்துவிளையாட்டு காட்டினார்கள் என்பது யாரும் அறியாத ஒன்றல்ல, இவர்களுக்கான தண்டனையானது இறைவனால் கொடுக்கப்படும் காலம் வெகுதூரமில்லை என்பதையும் ஈமான் கொள்வோமாக..
எது எப்படியிருந்தாலும் இதனைவைத்து அரசியல்செய்ய நினைத்த அரசியல்வாதிகள் தங்களுடைய கீழ்த்தரமான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக சாய்ந்தமருது என்ற ஊரை ஸஹ்ரானின் ஊர் என்று காட்டிக்கொடுத்தது மட்டுமல்ல, இந்தவூருக்கு விசேட வர்த்தமானி மூலம் ஏன் சபை வழங்க முற்படவேண்டும் என்ற ஐயத்தையும் சேர்த்து இரண்டுக்கும் முடிச்சிபோட்டு, அதனை இனவாதிகளுக்கு சொல்லிக்கொடுத்து, தங்களுடைய கீழ்த்தரமான அரசியலை செய்ய முற்பட்ட விடயத்தை எல்லாம் அறிந்த அல்லாஹ் என்றுமே மன்னிக்கமாட்டான் என்பதே உண்மையாகும்.
இறுதியாக கூறுகின்றேன்...கல்முனை விடயமானது மேண்மைதங்கிய பிரதமர் மஹிந்த மூலமும், முன்னால் அமைச்சர் அதாவுள்ளாவின் வழிகாட்டலின் மூலமாகவும் நிச்சயமாக தீர்த்துவைக்கப்படும் என்பதை உறுதியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்....இதற்கு வல்லநாயகனும் உதவிபுரிவான் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்
முனைமருதவன்