Ads Area

ஆறு சவுதி பெண்களுக்கு கொரனோ வைரஸ் தொற்று இருப்பதாக கண்டுபிடிப்பு.

ஈரான் நாட்டிலிருந்து பஹ்ரைன் ஊடாக வந்த 6 சவுதி அரேபிய பெண்களுக்கு கொரனோ வைரஸ் தொற்று இருப்பதாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட சவுதிப் பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் படி சவுதி அரசு பஹ்ரைன் அரசிடம் முன் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க தற்போது கொரனோ வைரஸ் பாதிப்புக்குள்ளான குறித்த 6 சவுதிப் பெண்களும் பஹ்ரைனில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது ஈரான் நாட்டில் கொரனோ வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்தும் வரும் குவைத், சவுதி, பஹ்ரைன் நாட்டவர்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது இதே வேளை குவைத் நாட்டில் இதுவரை சவுதி நாட்டவர் உட்பட 3 பேர் கொரனனோ வைரஸ் தாக்கப்பட்டிருப்பதாகவும் ஒவ்வொருவரும் தனித் தனி அறையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வளைகுடா நாடுகளில் ஈரானில் கொரனோ வைரஸின் தாக்கம் அதிகமாவுள்ளதாகவும் இதுவரை அங்கு 19 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதோடு இவ் வைரஸ் தாக்கம் ஏனைய வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

சவுதி அரேபியாவில் இது வரை யாருக்கும் வைரஸ் தொற்று இடம் பெறவில்லை இருந்தும் சவுதி அரேபிய அரசு கொரனோ வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க முன்னேற்பாடுகளை செய்து வருகிறது மேலும் வைரஸ் தாக்கம் குறித்து 937 என்ற அவசர இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தும் படியும் நாட்டு மக்களை கேட்டுள்ளது.

செய்தி மூலம் - https://www.saudi-expatriates.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe