யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக, பெண்கள் அமைப்பினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, பாலியல் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எதிராக கோசமிட்டனர்.
இந்த போராட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களும் மகளிர் அமைப்புகளும் கலந்துகொண்டனர்.