காலையில் எடுத்துக் கொள்ளும் சத்தான உணவே நம்மை, நாள் முழுவதும் தேவையற்ற தவறான உணவுகள் எடுத்துக் கொள்வதினை தவிர்க்கும்.
காலையில் நமக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி ஏழு மணிக்கு கிளம்பும்போது இட்லி, தோசை போன்ற உணவுகள் உண்பதற்கு கனமான உணவாகும். இதனால் அநேகர் காலை உணவினை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் காலையில் எடுத்துக் கொள்ளும் சத்தான உணவே நம்மை, நாள் முழுவதும் தேவையற்ற தவறான உணவுகள் எடுத்துக் கொள்வதினை தவிர்க்கும். ஆக எளிதாக சத்தாக காலையில் எடுத்துக் கொள்ளக் கூடிய சில உணகளைப் பார்ப்போம்.
02. தயிர் - புரதம் நிறைந்தது. பசியை கட்டுப்படுத்தும். எடை குறையும். குடலுக்கு மிகவும் சிறந்தது.
03. ஓட்ஸ்- அநேகர் காலை உணவாக ஓட்சை விரும்புகின்றனர். இதிலுள்ள நார்சத்து உடலுக்கு அநேக நன்மைகளை அளிக்கின்றது. கொலஸ்டிரால் குறையும். வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். இருதயம், உயர் ரத்த அழுத்த குறைப்பு இவற்றுக்கு பெரிதும் உதவும்.
05. பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகளை 2 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளலாம்.
06. பப்பாளி, ஆரஞ்சு, பிளாக்ஸ் விதை, கிரீன் டீ போன்றவையும் காலை உணவில் சேர்த்துக் கொள்ள மூளை, நரம்பு மண்டலம் வலுப்பெறும்.