(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாவட்ட மட்ட சதுரங்க போட்டி சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியலயத்தில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளனத்தின் பிரதித் தலைவர் கே.சிவனேசன் அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை 2020.02.22 இடம்பெற்ற போது ஜே. எம்.ஸஹ்மி,எம்.இல்ஹாம், பி.எம்.எப் .நுஹா ,எப்.ஷிபா, எப்.இல்மா, ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகினர்.
இம் மாணவர்களை பயிற்றுவித்த பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.ஜே.முபீத் அவர்களுக்கு ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ அப்துல் ரசாக் , பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் இவ் பாடசாலையானது தனது 60வது ஆண்டு நிறைவை இவ் வருடம் வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.