கல்முனை மாநகர எல்லைக்குள் சட்ட விரோதமாக கழிவுகள் போடப்படும் 14 இடங்கள் கல்முனை பொலிஸாரினால் இனங்காணப்பட்டு குறித்த 14 இடங்களிலும் கல்முனை மாநகர சபையினால் எச்சரிக்கை விளம்பரப் பலகை நடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை மீறி குறித்த இடங்களில் கழிவுகளைப் போடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பொலிஸ் நிலையம் எச்சரிக்கை அறிவித்தல் விடுத்துள்ளது.