டுபாயில் பிலிபைன்ஸ் நாட்டு பணிப் பெண் ஒருவரை இரும்பு பாரால் தலையில் அடித்துக் கொன்ற பாகிஸ்தானி ஒருவருக்கு அந் நாட்டு அரசாங்கம் ஆயுள் தண்டனை விதிப்பு தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
டுபாயில் வேலைக்குச் சென்ற 22 வயது பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் தனது முதலாளியோடு பிரச்சினைப்பட்டு பல நாட்கள் வேலையில்லாது இருந்த நிலையில் அல்-பஸா பிரதேசத்தில் வீடு ஒன்றினுல் நுழைந்து அங்கு திருட முற்பட்ட வேளை அதனைக் கண்டு தடுத்த அவ் வீட்டில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்னை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந் நிலையில் கடந்த வாரம் குற்றவாளிக்கு டுபாய் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.