(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை கல்வி வலயத்திலிருந்து ஓய்வு பெற்று செல்லவிருக்கும் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜெலீல் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தின் அபிவிருத்தி குழுவின் செயலாளர் எஸ்.எல் அப்துல் அஸில் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாடசாலை அதிபர் ஏ.எச் அலிஅக்பர் தலைமையில் (24) இவ் பாராட்டு வைபவம் பாடசாலையில் இடம்பெற்றது.
இதன் போது பாடசாலை அபிவிருத்தி குழுவினர்களினால் வலயக்கல்வி பணிப்பாளருக்கு பொன்னாடை போற்றி, சின்னம் நினைவு வழங்கி கௌரவிக்கப்பட்டது.