Ads Area

வடிவேலுவைப் போன்று நெட்டிசன்கள் எப்போதும் கொண்டாடும் இத் தலைவனுக்கு இன்று 38-வது பிறந்தநாள்...!

நம் ஊர் வடிவேலுவுக்கு அடுத்தபடியாக நெட்டிசன்களால் அதிகபடியாக உபயோகிக்கப்பட்ட மீம் மெட்டிரியலான ஒசிட்டா ஐஹீம் இன்று தனது 38 பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

யார் இந்த ஒசிட்டா ஐஹீம்...??

நம்முடைய எல்லா வகையான மனநிலைக்கும் அவரது முகம் பொருந்திப்போகும். அப்படி ஒரு முக அம்சத்தை கொண்டவர் ஒசிட்டா ஐஹீம். பலரும் நினைப்பது போல அவர் சிறுவன் அல்ல.

இன்று 38-வது பிறந்தநாளை கொண்டாடும் அவர் 1982-ம் ஆண்டில் பிறந்தவர். நைஜீரியாவைச் சேர்ந்த ஒசிட்டா அந்நாட்டுத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.

தற்போது நெட்டிசன்கள் பயன்படுத்தும் அனைத்து படங்களுமே, அவரின் படத்தில் இடம்பெற்றவைதான்.

தனது 16 வயதிலேயே ‘ஆப்ரிக்காவின் ஆஸ்கார்’ என்று அறியப்படும் ஆப்பிரிக்கன் மூவி அகாடமி அவார்ட் நிகழ்வில் 1998-ம் ஆண்டு ஒசிட்டா ஐஹீமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து பல விருதுகள், பாராட்டுகளை குவித்த ஒசிட்டாவுக்கு, 2011-ம் ஆண்டில் நைஜீரிய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்புக்காக, ஃபெடரல் குடியரசின் விருது குடியரசுத்தலைவரால் வழங்கப்பட்டது.இன்று அவரின் பிறந்தநாள் என்பதால், நாடு, மொழி கடந்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe