2014ம் ஆண்டே நாம் சொன்னோம் கல்முனையை மூன்றாக பிரித்தே சாய்ந்தமருதுக்கு சபை கொடுக்க வேண்டும் என. அதுவே உலமா கட்சியின் நிலைப்பாடு.
கடந்த 5 வருடமாக முஸ்லிம் காங்கிரசின் பலத்த ஆதரவில் ஐ தே க இருந்த போது இதனை நிறைவேற்றியிருக்கலாம். ஆனாலும் ஜனாதிபதி தேர்தலில் சாய்ந்தமருது பள்ளிவாயல் ஆதரவுக்காக மஹிந்த வழங்கிய வாக்குறுதியை அவர் நிறைவேற்றினார். அதில் தப்பில்லை.
அதற்குப்பின் சாய்ந்தமருது சபை அறிவித்தல் கொண்டாட்டம் மிக ஓவராகவே இருந்தது. ஏதோ தனி நாடு கிடைக்கப்பெற்றது போல் குதித்ததால் சிங்கள மக்கள் அச்சமடைந்தனர் என்பதே உண்மை.
விமல் வீரவன்சவை இனவாதி என கல்முனை முஸ்லிம்கள் சொல்வர். ஆனால் அவர் தலையிட்டதன் காரணமாகவே சாய்ந்தமருது சபை அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கல்முனை பிரிப்புக்கு எதிரான கல்முனை முஸ்லிம்கள் விமல் வீரவங்சவுக்கு பாராட்டு கடிதம் அனுப்புவார்களா?
அத்துடன் கல்முனையை நான்காக பிரித்தே தீர்வு வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அமைச்சரவை கூட்டத்தில் சொல்லியுள்ளார்.
கோட்டாவை ஆதரிப்பதற்கான உலமா கட்சியின் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இது விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே ஜனாதிபதியின் மேற்படி கருத்துக்காக கல்முனைத்தொகுதி முஸ்லிம்கள் சார்பில் உலமா கட்சி நன்றி தெரிவிக்கிறது. அத்துடன் முழு கல்முனையும் இது விடயத்தில் எமது ஜனாதிபதிக்கு பகிரங்க நன்றி சொல்ல வேண்டும்.
இனி கல்முனை சாய்ந்தமருது என அனைவரும் ஒற்றுமைப்பட்டே இந்தப்பிரச்சினையை தீர்க்க முடியும். இனியும் கல்முனை,சாய்ந்தமருது என பிரதேச வாதத்தைதை விதைக்கும் முஸ்லிம் காங்கிரசை மக்கள் ஒதுக்கிவிட்டு ஜனாதிபதி கோட்டாவின் கைகளை பலப்படுத்த முன் வர வேண்டும்.