கத்தார் - தோஹாவில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு ஆசிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தோஹா விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீடோன்றில் மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்தாரின் பாதுகாப்புத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுடன் பெருமளவான மதுபான போத்தல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - கட்டார் தமிழ் செய்திகள்.