நூருல் ஹுதா உமர்.
தஹ்வா இஸ்லாமிய கலாபீட 10வது பட்டமளிப்பு விழா வும் பரிசளிப்பு வைபகமும் இன்று (02) காலை சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் கலாபீட தலைவர் மௌலவி யூ.எல்.எம். காசீம் (கியாதி) அவர்களின் தலைமையில் நடைெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார். மதுரன் குழி மெர்சி கல்விவளாக பணிப்பாளர் மௌலவி எ. பௌசுள் ரஹ்மான்(நழிமி) கௌரவ அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இப்பட்டமளிப்பு விழாவில் அம்பாறை மாவட்ட பல பகுதியையும் சேர்ந்த 15 மாணவர்கள் கூர் ஆனை மனனம் செய்து அல்ஹாபிழ் பட்டம் பெற்று வெளியேறினர்.
இப்பட்டமளிப்பு விழாவில் முக்கிய கல்விமான்கள், வர்த்தகர்கள், கலாபீட மாணவர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.