(நூருல் ஹுதா உமர்)
சாய்ந்தமருது ஒஸ்மானியா விளையாட்டு கழகத்தின் புதிய அங்கி (Jersey) அறிமுக விழா நேற்று (01) சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒஸ்மானியா விளையாட்டு கழகத்தின் முகாமையாளர் ஏ.எல் பாஹிம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விளையாட்டு போட்டிகளில் திறமைகாட்டிய வீரர்களுக்கு நினைவுச் சின்னங்களும், ஒஸ்மானியா விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு புதிய அங்கிகளும் (Jersey) அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.