சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக ஆபத்தான நிலையில் பழுதடைந்திருக்கும் சுற்று மதிலை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று (2020.02.05) கல்வியமைச்சில் கட்டிடப் பொறியாளர் அலுவலகத்தின் திட்டப் பணிப்பாளர் (PD) Mr. பத்மானந்தன் அவர்களை பாடசாலை அதிபர் திரு. இஸ்மாயில் அவர்கள் சந்தித்து பாடசாலையின் சுற்று மதில் தொடர்பாகவும், மதிலின் ஆபத்தான நிலை தொடர்பாகவும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டு அதனை விரைவில் புணரமைத்து தருவது தொடர்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இருந்த போதும் 2019 ஏப்ரல் மாதம் திறைசேரியின் அறிவுறுத்தலின் படி எந்தவித புதிய வேலைகளையும் ஆரம்பிக்க வேண்டாம் எனவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே புதிய வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என கல்வியமைச்சின் கட்டிடப் பொறியாளர் அலுவலகத்தின் திட்டப் பணிப்பாளர் (PD) Mr. பத்மானந்தன் அவர்கள் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.