முகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)
Makkal Nanban Ansar5.2.20
வத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் வாய்த்தர்க்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் பொருள் கொள்வனவுக்காக சென்ற முஸ்லிம் பெண்ணொருவர் முகத்தை டி அணியும் புர்காவுடன் சென்றுள்ளார்.
இதன்போது அங்கு நின்ற ஒருவர் புர்கா தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே புர்காவுடன் உள்ளே வரவேண்டாம் என கூறுகிறார்.எனினும் புர்காவை தான் அணிந்திருந்து விரும்பியதைச் செய்வேன் என தெரிவித்த முஸ்லிம் பெண் புர்காவுடன் வரவேண்டாம் என தெரிவித்த ஆணுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
கடந்த உயிர்த்தஞாயிறு தாக்குதலை அடுத்து அவசரகாலநிலையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவசரகால நிலை நீக்கப்பட்டபோதிலும் பல இடங்களில் புர்காவுடன் முஸ்லிம்பெண்கள் நுழைவதை தடைசெய்யும் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.