நூருல் ஹுதா உமர்
இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான சுதந்திர தின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை அக்கரைப்பற்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு பிராந்திய முகாமையாளர் காரியாலய அருகாமையில் அமைந்துள்ள ஐக்கிய சதுக்க நீர்தடாக முன்றலில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி தலைமையில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று மாநகரம் தேசியக் கொடியால் அழகுபடுத்தப்பட்டும், அக்கரைப்பற்றில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டும், விழா நடைபெறும் Water Park அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது இவ்விழாவின் சிறப்பம்சமாக காணப்பட்டது.