Ads Area

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 72 ஆவது சுதந்திரதின விழாவும் மர நடுகை நிகழ்வும்.

'பாதுகாப்பான தேசம் செழிப்பான நாடு' என்ற தொணிப் பொருளில் மலர்ந்த எம் தாய் நாட்டின் சுதந்திர தினத்தை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. M.H.M. Azaath அவர்களினால் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டு கொண்டாடப்பட்டது. சம்மாந்துறை மண்ணிலிருந்து சுதந்திரத்துக்காக பாடுபட்ட, உயிர்தியாகம் செய்த பெரியார்களையும் வைத்திய அத்தியட்சகர் ஞாபகப்படுத்தி கௌரவித்தார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தேசியக் கொடியின் முன்பாக பசுமை எனும் எண்ணக் கருவை முன்னிலைப்படுத்தி நமது தேசிய மரமான நா மரக்கன்றொன்று வைத்திய அத்தியட்சகரினால் நடப்பட்டது. மேலும் பல மரங்கள் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் நிர்வாக உறுப்பினர், தாதிய பரிபாலகர்கள், மற்றும் ஏனைய ஊழியர்கள் உத்தியோகத்தர்களினால் 20 க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன.

வைத்திய அத்தியட்சகரின் ஆலோசனைப்படி இவ்வருடம் ஒவ்வொரு ஊழியர் உத்தியோகத்தரும் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு மரம் நட்டு அதைப் பராமரிக்க வேண்டும் என்றார். இதனடிப்படையில் தாதிய உத்தியோகத்தர் அசாட் அவர்களினால் மா மரமொன்று நடப்பட்டது.

வைத்திய அத்தியட்சகர் அவர்களினால் சகல விடுதிகளும் பார்வையிடப்பட்டது. இவ்வருடம் எல்லா விடுதிகளிலும் தேசியக் கொடியுடன் 72 nd Independance day என்று பொறிக்கப்பட்டிருந்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

"சூழலை சுத்தமாக்க மரம் நடுவோம்"







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe