உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய உயிர்கொல்லி வைரஸானா கொரோனோ வைரசை கட்டுப்படுத்த சவுதி அரேபியா பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது.
சவுதி அரேபியாவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் கூட பல்வேறு பயணத் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது. புனித மக்காவில் உள்ள கஃபாவை தொடவோ, அருகில் செல்லவோ தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கை குழுக்குதல், கட்டியணைத்து ஸலாம் சொல்லுதல் போன்றனவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதே போல் தற்போது, ஐவேளை தொழுகைக்கு அதான் (தொழுகைக்கான அழைப்பு) ஒலித்தவுடன் 10 நிமிடத்திற்குல் இகாமத் (தொழுகைக்கான இரண்டாவது அழைப்பு) சொல்லி தொழுகையை நடாத்தி முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளிக் கிழமைகளில் ஜும்மா பிரசங்கங்களை 15 நிமிடத்திற்கு மேற்படாதவாறு நடாத்தி முடிக்கவும் சகல பள்ளிவாசல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - http://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.