நூருல் ஹுதா உமர்.
சாய்ந்தமருதுக்கான நகரசபை உருவாக்கத்திற்காக அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பல்வேறு பணிகளை செய்து எமக்கான நகர சபையை பெற்றுத்தந்தமையை நாங்கள் நேரடியாக கண்டவர்கள் என சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருது,மாளிகைக்காடு மக்கள் பணிமனையில் நேற்று இரவு இடம்பெற்ற சாய்ந்தமருதின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பான மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு பேசிய அவர்,
இந்நிலையில் சாய்ந்தமருதுக்கான நகரசபை உருவாக்கத்திற்காக அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பல்வேறு பணிகளை செய்து எமக்கான நகர சபையை பெற்றுத்தந்தமையை நாங்கள் நேரடியாக கண்டவர்கள் எனவே அவரது தியாகத்திற்கும், எமது கனவுகளை நிறைவேற்றி தந்தமைக்காகவும் அவருக்கு எதிர்காலத் தேர்தல்களில் நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டவர்களாக உள்ளோம்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்தி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் என்போரை நியமித்து தருமாறு பிரதமரிடம் தமிழ் தரப்பினாரால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களே அந்த செயலகத்தின் நிலை, எல்லைகளில் உள்ள பிரச்சினைகளை விளக்கி கல்முனை மண்ணை துண்டாடாமல் பாதுகாத்தார். கல்முனைக்கு ஆபத்தை உண்டாக்கும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சாய்ந்தமருது மக்கள் துணை நிற்க மாட்டார்கள். முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களுடன் இணைந்து கல்முனை மண்ணை பாத்துகாக்க சாய்ந்தமருது மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள் என்றார்.