சம்மாந்துறை அன்சார்.
அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி இளைஞர் அமைப்பாளரும், அக் கட்சியின் சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.சி.எம். சஹீல் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியில் விரைவில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் முகமாக சம்மாந்துறை24 இணையத்தளம் பிரதேச சபை உறுப்பினர் சஹீல் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்,
அவ்வாறு ஒரு நிலைவரின் என்னை ஆதரித்த மக்களை ஒண்றினைத்து அவர்களுடைய அபிலாஷைகளுக்கேற்ப ஒரு நிலைப்பாட்டை அறிவிக்க காத்திருக்கின்றேன். இணையவுள்ளதாக மற்றும் இணைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.