நூருல் ஹுதா உமர்.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு மக்கள் பணிமனை ஏற்பாட்டில் "தேசிய அரசியலில் அம்பாறை மாவட்ட எதிர்கால அரசியல் புரட்சி தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம்" எனும் தொனிப்பொருளில் நேற்று (08) இரவு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சாய்ந்தமருத்துக்கு நகரசபை எனும் கனவை நனவாக்க உதவிசெய்வோரை தோளில் சுமப்போம் என சாய்ந்தமருதினால் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இணங்க அண்மையில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களின் முயற்சியினால் சாய்ந்தமருத்துக்கான நகரசபை வர்த்தகமாணி அறிவித்தல் வெளியாகியிருந்தது. (பின்னர் அது தற்காலியமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.) அதற்கான நன்றிக்கடனாக நேற்று இரவு மாளிகைக்காடு ஸைத் பின்த் தாபித் பள்ளிவாசல் முன்றலில் ஆரம்பித்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் வரை வாகன பவனியாகவும் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களையும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களையும் தோளில் சுமந்தும் வந்து இளைஞர்களும் ஊர் மக்களும் மேடையேற்றினர்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம், தேசிய காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் டொக்டர்.ஏ.உதுமாலெப்பை, தேசிய அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம். ஷியா, தொழில் சங்க செயலாளர் ஏ.சி.எம்.நிஸார்,கொள்கை அமுலாக்கள் செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் உட்பட பிரதிநிதிகள், உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.