உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சம் காரணமாக சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ராவுக்குப் பொறுப்பான அமைச்சு தற்காலிகமாக உம்ரா மற்றும் சுற்றுலா விசாக்கள் வழங்குவதை தடை செய்திருந்தது தற்போது இத் தடையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவர்கள் செலுத்திய உம்ரா கட்டணங்களை திருப்பிக் கொடுக்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது.
உம்ரா விசா கட்டணம் மற்றும் சேவைக் கட்டணங்களுக்கான பணத்தை முகவர்கள் ஊடாக செலுத்தியோர் அதனைத் திரும்பப் பெற அந்தந்த நாடுகளில் உள்ள உள்ளூர் உம்ரா முகவர்களை தொடர்பு கொள்ளுமாறு சவுதி அரேபிய உம்ரா மற்றும் ஹஜ் அமைச்சகம் வலியுறுத்தியது. இணையத்தின் ஊடாக (ஒன்லைன்) கட்டணம் செலுத்தியோரும் சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சினை தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் விசாரனைகள் தேவைப்படுவோர் அமைச்சின் சேவை மையத்தின் தொலைபேசி இலக்கமான எண் 00966-920002814 அல்லது மின்னஞ்சல் ஐடி mohcc@haj.gov.sa ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.