இலங்கை முஸ்லிம்களின் பரிதாப நிலை ; மஹர பள்ளியில் சிலை வைக்கப்பட்டுள்ளதால் ஜனாசா தொழுகையை வெளியில் தொழுத அவலம்.
மஹர பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டு அது சிங்கள அதிகாரிகளின் வணக்கத்திற்குரிய இடமாகவும் - சிறை அதிகாரிகளின் ஓய்விடமாகவும் மாற்றப்பட்டு அபகரிக்கப்பட்டிருந்தமை அண்மைய நாட்களாக பெரும் சர்ச்சையைத் தோற்று வித்திருந்தது.
இந் நிலையில் - நேற்று 02.03.2020 ஓய்வு பெற்ற ஒரு முஸ்லிம் கடற்படை அதிகாரியான T. Z. Bagus என்பவரின் ஜனாஸா தொழுகை - அப்பள்ளிவாசலுக்கு வெளியே மையவாடியில் தொழுவிக்கப்பட்டிருந்தமை கவலை தரும் விடையமாக அமைந்துள்ளது.