சவுதி அரேபியா நாட்டில் வெளிநாட்டினரை கவரும் விதத்தில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு மாற்றங்களில் ஒன்றுதான் ஹவுஸ் ரைவர்களுக்குமான Visiting Visa வசதி இதனடிப்படையில் தற்போது சவுதி அரேபியாவில் வீட்டுச் சாரதிகளாக மற்றும் சாதாரண லேபர் வேலை செய்பவர்கள் கூட தற்போது விசிட்டிங்களில் தங்கள் குடும்பத்தாரை சவுதி அரேபியாவுக்கு எடுக்க முடியும்.
இதனை https://www.mofa.gov.sa என்ற சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சின் (Ministry of Foreign Affairs of Saudi Arabia) இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
விசிட் விசாவைப் பெற்றுக் கொள்ள https://www.mofa.gov.sa இணையத்தளத்திற்கு சென்று ஒன்லைன் அப்ளிகேசன் போமினை நிரப்பி விசாவுக்கான கட்டணத்தினையும் செலுத்தி உங்களுக்கான விசாவினைப் பெற்றுக் கொள்ள முடியும், இது தொடர்பான மேலதிக விபரங்கள் அனைத்தையும் இணையத்தள வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு முன்னர் வீட்டுச் சாரதி மற்றும் சாதாரண லேபர் வேலை செய்வோர்களுக்கு விசிட் விசாவில் தங்கள் குடும்பத்தினரை சவுதி அரேபியாவிற்கு எடுக்க முடியாமல் இருந்தது, விசிட் விசாவில் குடும்பத்தினரை எடுப்பதாக இருந்தால் அவர் தொழில்முறை வேலைகள் (professional jobs) செய்பவராக இருந்திருக்க வேண்டும் ஆனால் தற்போது அம் முறை நீக்கப்பட்டு அனைவரும் விசிட் விசா பெற்றுக் கொள்ள முடியுமாகவுள்ளது.