டுபாயில் பணிபுரிந்து வந்த ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் பெண்கள் போன்று ஹபாயா ஆடையணிந்து 227,000 திர்ஹம் பணத்தை கொள்ளையடித்தமைக்காக டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
டுபாயில் நைப் (Naif) பிரதேசத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் 227,000 திர்ஹம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக டுபாய் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டதையடுத்து டுபாய் பொலிஸார் உடனடியாக அந் நிறுவனத்தில் உள்ள CCTV கெமறாக்களை பரிசோதனை செய்துள்ளர் அதில் பெண் ஒருவர் அந் நிறுவனத்தில் உள் நுழைந்து பணத்தைக் கொள்ளையடித்துள்ளமை பதிவாகியிருந்தமையை அடுத்து பொலிஸார் தீவிர விசாரனை நடாத்தியுள்ளனர்.
பணம் திருட்டுப் போய் 4 மணி நேரத்திற்குல் திருடியவரையும், திருடிய பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.