சம்மாந்துறை அன்சார்.
கொரோனோ நோய்த் தொற்று பரவாமல் தடுக்க சவுதி அரேபியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது இதனையொட்டி தற்போது 39 நாடுகளுக்கு பயணத்தடைகளையும் சவுதி அரேபியா விதித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சூடான், எத்தியோப்பியா, தென் சூடான், எரிட்ரியா, கென்யா, ஜிபூட்டி மற்றும் சோமாலியா போன்ற நாடுகளுக்கு செல்வதையும் அங்கிருந்து வருவதையும் தற்காலிகமாக தடை செய்துள்ளது.
மேற்குறித்த நாடுகளைச் சேர்ந்த சவுதி அரேபியாவில் பணிபுரிவோர் யாரும் அந் நாடுகளுக்குச் செல்லவோ அல்லது அந் நாடுகளில் இருந்து சவுதிக்கு வரவோ தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே...சவுதியில் இருந்து விடுமுறைக்காக இலங்கைக்கு சென்றுள்ள சகோதரர்கள் பயணத் தடை விடையம் தெரியாமல் பயண ஏற்பாடுகளை செய்து, பொருட்களை கொள்வனவு செய்து, கொழும்பு விமான நிலையம் வரை சென்று ஏமாந்து செல்ல வேண்டாம்.
மேலும் உங்களது விடுமுறைக்கான விசா காலம் முடிவுறும் நிலையில் இருந்தால், உங்கள் விமானப் பயண நாள் திகதி போன்றவை காலாவதியாகும் நிலையில் இருந்தால் உடனடியாக இது குறித்து நீங்கள் பணிபுரிந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு உங்களது விசா மற்றும் விமான டிக்கெட் தொடர்பில் அறிவித்தல் கொடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.