கொரோனா பரிசோதனையாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவருவதை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை கொரோனா பரிசோதனை நிலையமாக மாற்றியதைக் கண்டித்து மட்டக்களப்பு பிரதேசத்தில் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஹர்த்தால் காரணமாக கடைகள் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வாகனப் போக்குவரத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகரம் காத்தான்குடி வாழைச்சேனை ஏறாவூர் உட்பட முக்கிய நகரங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டதோடு, பாடசாலைகள், வங்கிகளும் இயங்கவில்லை பொதுச்சந்தைகள், தனியார் நிறுவனங்கள் என்பனவும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.