Ads Area

மறுமணத்திற்கு இடையூறாக இருந்ததால், 2 மாத பெண் குழந்தையை கொலை செய்த தாய்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த மண்ணம்பந்தல் மூங்கில் தோட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன், 35; கூலித்தொழிலாளி. இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன், பாபநாசம் அடுத்த ராஜகிரியைச் சேர்ந்த பைரோஸ்பானு, 28, என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 2 வயதில், மகாலட்சுமி மற்றும் கமர்நிஷா என்ற, 2 மாத பெண் குழந்தையும் இருந்தது. 

கணேசன், தன் குடும்பத்தினருடன், திருப்பாலத்துறையில், ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன், மயிலாடுதுறையில் உள்ள, தன் தாயை பார்க்க, கணேசன் சென்றார். 1ம் தேதி, பைரோஸ்பானு, போன் மூலம், கமர்நிஷா இறந்துவிட்டதாக, கணேசனிடம் கூறினார்.

நேரில் வந்த கணேசன், தன் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக கூறி, பாபநாசம் போலீசில் புகார் அளித்தார். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்தில் காயங்கள் இருந்ததால், பைரோஸ்பானுவிடம், போலீசார் விசாரித்தனர். அதில், கும்பகோணம் அடுத்த திருபுவனத்தைச் சேர்ந்த முகமது தல்கா என்பவருக்கு, பைரோஸ்பானுவை மறுமணம் செய்து கொடுக்க, அவரின் தந்தை அக்பர்அலி, 50, திட்டமிட்டுள்ளார்.

இந்த மறுமணத்துக்கு, கமர்நிஷா இடையூறாக இருக்கும் என கருதி, 2 மாத குழந்தையை, பைரோஸ்பானு, அக்பர்அலி உட்பட, நான்கு பேர் சேர்ந்து, துணியால், குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்தது, தெரிய வந்தது.இதையடுத்து, நான்கு பேரையும், பாபநாசம் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe