Ads Area

மகனின் கொடுமை தாங்க முடியாமல் கருணைக் கொலை செய்யக் கோரி மனு அளித்த வயோதிப தாய்-தந்தை.

தமிழ்நாடு திருப்பூர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன்(85). இவரது மனைவி கருணையம்மாள்(65). இவர்களுக்கு பழனிச்சாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகன் பழனிசாமி தங்களின் சொத்தை ஏமாற்றி பிடிங்கிக் கொண்டு தங்களை கொடுமைப்படுத்தி வருவதாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியர் மனு அளித்தனர்.


இது குறித்து அந்த முதியவர்கள் கூறுகையில், ”எனது மகன் பழனிச்சாமி, எங்களது சொத்துக்களை ஏமாற்றி, பிடுங்கிக் கொண்டு கடந்த10 ஆண்டுகால எங்கள் இருவரையும் கொடுமைப்படுத்திவருகிறான். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் ஆனாலும் நடவடிக்கை எடுக்க வில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் எங்களுக்கு விடிவு கிடைக்கவில்லை.

விபத்தில் சிக்கி நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். எங்கள் வீட்டில் மின்சாரத்தை துண்டித்து வைத்துள்ளார், குடிநீர் பிடிக்க விடுவதில்லை, நாங்கள் வாழவே வழி இல்லாமல் தத்தளித்து வருகிறோம் எனவே எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இல்லாவிடில் கருணைக் கொலை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்றனர்.


மகனின் கொடுமையால் தந்தை, தாய் இருவரும் கருணைக்கொலை செய்யக்கோரி மனு அளிக்க வந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe