சம்மாந்துறை அன்சார்.
நாள் தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் உம்ராக் கடமைக்காக வந்து போகும் புனித மக்கா கஃபத்துல்லாவின் தவாப் செய்யும் பகுதி தற்போது யாத்திரிகள் இன்றி காணப்படுகின்றமையால் பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனினும் புனித மக்கா பள்ளிவாசலின் கஃபத்துல்லாவைச் சுற்றி தவாப் செய்யும் பிரதேசத்தைத் தவிர ஏனைய இடங்களில் மக்கள் தொழுகை போன்ற கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் கஃபத்துல்லாவின் மேற் பகுதியில் மக்கள் தவாப் செய்து வருவதும் குறிப்பிடத் தக்கதாகும்.

மறு அறிவித்தல் வரை புனித மக்காவிற்குள் செல்லும் வழி உட்பட புனித மதினா நகர் பள்ளிவாசலுக்குள் செல்லும் பாதைகளும் மூடப்படுவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.