சவுதி அரேபியாவில் பிறந்து சிறு நேரத்தில் பெண் ஒருவரினால் கடத்திச் செல்லப்பட்ட மூஸா அல்-ஹனைஸ் (Moussa Al-Khanezi) என்ற நபர் ஒருவர் 20 வருடங்களின் பின்னர் தனது சொந்த தாய்-தந்தையோடு இணைந்து நெகிழ்ச்சியை ஏற்படு்த்தியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடத்தப்பட்ட குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கு அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெற்றுக் கொள்ள அலுவலகத்திற்கு சென்ற அவர் அக் குழந்தைகளை தனது சொந்தக் குழந்தைகள் என நிறுபிக்கத் தவறியதால் அவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அப் பெண்ணிடம் விசாரனைகளை மேற் கொண்டுள்ளனர் அதில் அவர் தான் 3 குழந்தைகளையும் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கடத்தி வந்து வளர்ப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து தீவிர விசாரனைகளை மேற் கொண்ட பொலிஸார் அல்-ஹனைஸ் (Moussa Al-Khanezi) என்ற கடத்தப்பட்ட நபருக்கு மரபனு பரிசோதனை செய்து அவரது சொந்த தந்தையினை கண்டு பிடித்து தற்போதுஅவரது சொந்த குடும்பத்தினரோடு சேர்த்து வைக்கப்பட்டுள்ளார் தொலைந்து போன தனது மகன் கிடைத்து விட்ட சந்தோசத்தில் அல்-ஹனைஸ் (Moussa Al-Khanezi) வின் உண்மையான தந்தை மற்றும் சகோதரர் அவரை ஆரத்தழுவி முத்தமிட்ட காட்சி காண்போரை நெகிழச் செய்திருந்தது.
இது குறித்து அல்-ஹனைஸ் (Moussa Al-Khanezi) சகோதரர் தெரிவிக்கையில்,
பிறந்த சில மணி நேரங்களில் தொலைந்து போன தனது சகோதரனைத் பல வருடங்களாக தனது தந்தை தேடியலைந்ததாகவும், தனது மகனை யாராவது கண்டுபிடித்துத் தந்தால் அவர்களுக்கு பல சன்மானங்கள் வழங்குவதாக அறிவித்திருந்தாகவும் தெரிவித்தார்.
தனது மகனுக்கு தற்போது அனஸ் என்று பெயர் வைத்துள்ளோம் மேலும் அவர் தன்னை கடத்தி வளர்த்து வந்த பெண்ணோடு பேசுவதற்கு எந்தவொரு தடையும் இல்லை மேலும் அப் பெண் மீது எந்தவித சட்டநடவடிக்கையும் எடுக்கப் போவதுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் குழந்தைகளை கடத்திய அப் பெண்ணிடம் ஏனைய 2 குழந்தைகள் பற்றி பொலிஸார் தற்போது விசாரனைகளை மேற் கொண்டு வருவதாகவும் விசாரனைகளின் பின்னர் ஏனைய இருவரின் உண்மையான குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் சவுதி அரேபியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்தி மூலம் - https://stepfeed.com and https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார் (www.sammanthurai24.com)