Ads Area

பெண்கள் பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவேற்ற வேண்டாம் - இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு.

இணைய மோசடியாளர்களிடம் இருந்து பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

வீட்டிலுள்ள இல்லத்தரசிகள் நாள் முழுவதும் இணையத்தளம் மற்றும் முகப்புத்தகத்தை பயன்படுத்துவதனால் மோசடியாளர்களிடம் சிக்குவது தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.


தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இதுவரையில் கிடைத்துள்ள முறைப்பாடுகளில் நூற்றுக்கு 50 வீதமானவைகள் அவ்வாறான முறைப்பாடுகள் என குறிப்பிடப்படுகின்றது.

இல்லத்தரசிகள் தங்கள் புகைப்படங்களை மோசடி நபர்களின் வட்ஸ்அப் மற்றும் முகப்புத்தகத்தில் அனுப்புவதனால் பணமோசடி மற்றும் பாலியல் ரீதியான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகப்புத்தகம் ஊடாக அறிமுகமாகும் புதிய நண்பர்களுக்கு பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் அனுப்புவதனால் பிர்ச்சினைகள் ஏற்படுவதாக நூற்றுக்கு 30 வீதமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.


பெண்களில் பெரும்பாலானோர் தங்கள் கையடக்க தொலைபேசி ஊடாக இணையத்தளம் பயன்படுத்துவதனால் அதனை நூற்றுக்கு 98 வீதமானோர் கணக்கிடப்பட்டுள்ளது.

இதனால் முகப்புத்தகத்தில் அறியாத நண்பர்களுடன் எவ்வித கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பெண்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் தனியார் நிகழ்வுகள் மற்றும் உல்லாசப் பயணங்களின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட வேண்டாம் என இலங்கையர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe