Ads Area

ரமழான் மாதத்தில் கொரோனா தொற்று பரவாத விதத்தில் மக்கள் நடந்து கொள்ள வேண்டும்.

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ்  அனர்த்தத்தினால்   உலக சுகாதார நிறுவனம் எதிர்வரும் இஸ்லாமியர்களின் ரமழான் நோன்பினை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. அதனடிப்படையில் கொரோணா தொற்று பரவாத வண்ணம் மத நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளது   என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

கொரோனா தொற்று தொடர்பில்   தொடர்பாக வெளிவந்த செய்தி  தொடர்பாக வியாழக்கிழமை (23)  கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

எந்த சமய நிகழ்வான நாளும் அல்லது பொது நிகழ்வு ஆனாலும் கொவிட்19 நெருக்கடி நிலையில் மக்கள் ஒன்று கூடும் விடயங்களை தவிர்ப்பதற்காக சமூக இடைவெளியை இருவருக்கிடையே கடைப்பிடிக்கும்படி மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.  அதன் அடிப்படையில் பெறுமதிமிக்க எந்த நிகழ்வாகும் நோய் தொற்றின் அடிப்படை விடயங்களை விளங்கிக் கொண்டால் இலகுவாக செயலாற்ற முடியும் என்பதுதான் எனது எண்ணம்.

அந்த வகையில் உலக சுகாதார நிறுவனம் எதிர்வரும் இஸ்லாமியர்களின் ரமழான் நோன்பினை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. அதனடிப்படையில் கொரோணா தொற்று பரவாத வண்ணம் மத நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளது.



அதனடிப்படையில்  மத நிகழ்வுகளுக்கு அல்லது மத கடமைகளுக்கு எதிராக நாங்கள் செயலாற்ற போவதில்லை எல்லா மதங்களையும் இனங்களையும் பிராந்தியங்களை ஒன்றிணைத்து தான் இந்த தொற்றுக்கு எதிரான செயற்பாடுகளில் பிறக்க முடியும் இதில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.  ஆகவே எமது சுகாதார அமைச்சினால் இதற்கான சுற்றுநிருபங்கள் விரைவில் வெளியிடப்படும். அதற்கு அமைய நாங்கள் அடுத்த கட்ட முயற்சிகளை முன்னெடுப்போம் . மத அனுஷ்டானங்களை கடைப்பிடியுங்கள் என்று வீட்டிலிருந்து மேற்கொள்ளுங்கள் அவ்வாறுதான் சித்திரைப் புத்தாண்டையும் கொண்டாட அறிவுரைகளை வழங்கி இருந்தோம் என கூறினார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe