(எம்.எம்.ஜபீர்)
ஜனாதிபதியின் எண்ணக்கருக்கமைவாக பத்து இலட்சம் வீட்டுத்தோட்டத்தினை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கமைவாக 'சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்திற்கான விதைகள் வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
.
சவளக்கடை விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் முதல்கட்டமாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் தோட்டம் மற்றும் வேளாண்மை செய்கையில் ஈடுபடும் 610 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வீட்டுத்தோட்டச் செய்கையாளர்கள் 200 பேர் மற்றும் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான வரம்புப்பயிர்ச் செய்கையாளர்கள் 410 பேர் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர்.