Ads Area

பல மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணங்களுடன் அம்பாறை மாவட்டத்தில் களமிரங்குகிறார் ஹரீஸ்.

அபு ஹின்சா. 

நாட்டில் கொரோணா தொற்று பரவிவருவதனால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பில் ஆராயும் சந்திப்போன்று அண்மையில் பொத்துவில் பிரதேசத்தில் நடைபெற்றது. 

கொரோணா தொற்றின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கான நிவாரணப்பணியை முன்னெடுக்கும் நோக்கில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பொத்துவில் பிரதேசத்தில்  நிவாரணப்பணியை முன்னெடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிவாரணப்பணியை சிறப்பாக முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் நிவாரணத்தில் பெரும்பகுதியிலான தனது பங்களிப்பை வழங்க தயாராக இருப்பதாகவு உறுதியளித்தார் மேலும் ஏனைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் பங்களிப்புக்களையும் பெற்று இப்பணியை செய்வதென அக்கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும், பொதுத்தேர்தல் வேட்பாளருமான கலாநிதி எம்.எஸ். அப்துல் வாசித், பிரதேச சபை உறுப்பினர் எம்.எம். ஹியாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களான சட்டத்தரணி பைசல், சட்டத்தரணி சாதீர், எம்.பயாஸ் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

மேலும் விரைவில் இடம்பெற உள்ள நிவாரண விநியோக நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும், பொதுத்தேர்தல் வேட்பாளருமான கலாநிதி எம்.எஸ். அப்துல் வாசித் அவர்கள் தலைமையிலான உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

அதே போன்று தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பில் ஆராயும் சந்திப்புகள் அண்மையில் இறக்காமம் பிரதேச செயலக பிரதேசங்களிலும் நடைபெற்றது. 

கொரோணா தொற்றின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கான நிவாரணப்பணியை முன்னெடுக்கும் நோக்கில் இறக்காமம், வரிப்பத்தன்சேனை, குடுவில், மாணிக்கமடு, வாங்காமம் போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இறக்காமம்  பிரதேச செயலக பிரதேசங்களில் நிவாரணப்பணியை முன்னெடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிவாரணப்பணியை சிறப்பாக முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் நிவாரணத்தில் பெரும்பகுதியிலான தனது பங்களிப்பை வழங்க தயாராக இருப்பதாகவு உறுதியளித்தார் மேலும் ஏனைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் பங்களிப்புக்களையும் பெற்று இப்பணியை செய்வதென அக்கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜபீர் மௌலவி, இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்களான சகோதரர் ஜெமீல் காரியப்பர், சகோதரர் நைசர், சகோதரர் ஆஷிக், சகோதரர் முஸ்னி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜிப்றி ஆசிரியர், மத்தியகுழு தலைவர் சகோதரர் நிஸார் ஆசிரியர், மத்தியகுழு உறுப்பினர்களான சகோதரர் பர்ஹான், சகோதரர் பரீட், சகோதரர் ஹக்கீம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

மேலும் விரைவில் இடம்பெற உள்ள நிவாரண விநியோக நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை இறக்காமம் பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதே போன்று அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் தனது நிவாரணப்பணியை முன்னெடுக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆயத்தங்களை செய்துவருகிறார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe