Ads Area

மத்திய முகாமில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட பயங்கரவாதக் குண்டு தாக்கதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து விசேட துஆப் பிராத்தனை.

(எம்.எம்.ஜபீர்)

மத்தியமுகாம் அல்-மஸ்ஜிதுல் முஹம்மதியா ஜூம்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில்  உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட பயங்கரவாதக் குண்டு தாக்கதலால் உயிர் நீத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்தும்  நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டியும் விசேட துஆப் பிராத்தனை இன்று  இடம்பெற்றது.

மத்தியமுகாம் அல்-மஸ்ஜிதுல் முஹம்மதியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.எச்.சலீம் தலைமையில் நடைபெற்ற  துஆப் பிராத்தனையில் நாவிதன்வெளி பிரதேச சபையின் பதில் தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாவிதன்வெளி பிரதேச  அமைப்பாளருமான ஏ.கே.அப்துல் சமட், நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ்.எம்.அஷாத், பள்ளிவாசல் செயலாளர் யூ.கே.எம்.ஜிப்ரி, பள்ளிவாசல் நிர்வாகம், உலமாக்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன் விசேட துஆப் பிராத்தனையினை மௌலவி எம்.வீ.எம்.றிபாஸ் நிகழ்த்தினார்.

இதன்போது முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின்  வேண்டுகோளுக்கினங்க தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையிலும், நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டியும் பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாசல்களும் விசேட துஆப் பிராத்தனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe