Ads Area

இலங்கையில் கொரோனாவின் மறுபக்கம் உண்மையை திரிபுபடுத்தும் இனவாத ஊடகங்கள்.

ஹிரு மற்றும் தெரண ஊடகங்கள் கோவிட் -19 இல் குறை கூறுவதில் மட்டுமே குறியாக இருக்கபோகிறார்களா?? குற்றம் சொல்வதற்குப் பதிலாக, தமிழ் மொழியிலும் மக்களை விழிப்பூட்டுவதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.

படத்தில் உள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது "April 10 ஆம் திகதி IDH வைத்தியசாலையில் COVID-19 நோயிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு வந்த நபர் சுகாதார ஆலோசனையை பின்பற்றாது ஊர் முழுவதும் சுற்றி திரிந்துள்ளார்" என்பது.

உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய அவரை தொடர்பு கொண்டபோது;

அவர் April 10 ஆம் திகதி 6 -7 pm வேளை அளவில் Ambulance மூலம் வீட்டுக்கு கொண்டுவந்து விடப்பட்டுள்ளார்.

அவருக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டதும் அவரது குடும்பத்தார் அனைவரும் தனிமைப்படுத்தல் (Quarantine Centre) முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு விட்டனர்.

அவரது வீடு சுகாதார அதிகாரிகளால் ஏற்கனவே தொற்று நீக்கப்பட்டு இருந்தபோதும் இப்போது அவர் உள்நுழைய அவர் கையில் திறப்பு இருக்கவில்லை.

இதனால் தன்னை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த அதிகாரிகளிடம் தனது சகோதரியின் வீட்டில் தங்குவதாகவும் தனது சொந்த வீட்டின் திறப்பு கிடைத்ததும் சொந்த வீட்டுக்கு மாறுவதாகவும் கூறியுள்ளார். இதனை அவரை விட்டுச்சென்ற அதிகாரிகளும் ஆமோதித்துள்ளார்.

ஆனால் மறுநாள் அவரது வீட்டுக்குச் சென்ற பொது சுகாதார அதிகாரிகள் அவர் வீட்டில் இல்லாததை கண்டுள்ளனர். அப்போது அவர் தனது சகோதரியின் வீட்டிலிருந்து வெளியே வந்து நடந்ததை சொல்ல முயன்றார். அவர் தான் சகோதரியின் வீட்டில் தங்குவதை Ambulance இல் வந்தவர்களிடம் சொன்னதாகவும் தன் பக்க நியாயத்தை முன்வைக்க முயன்றபோது அதை கண்டுகொள்ளாத அதிகாரிகள் அவரை எச்சரித்தனர்.

இந்த சம்பாஷனையின் இடை நடுவே புகுந்த media அதனை படம்பிடித்து ஒளிபரப்பியது. அந்நேரத்திலும் அவரை பேச விடவில்லை.

இதுவே நடந்த சம்பவம். மனிதநேயமுள்ள இலங்கையர்கள் இதன் பின்னால் உள்ள உண்மையை புரிந்து கொள்வீர்கள் என்பதை நம்புகிறேன்.

ஒரு விடயத்தின் உண்மைத் தன்மையை முழுமையாக அறியாமல் ஒளிபரப்புவது தான் ஊடக தர்மமா?

பிரச்சினைகளுக்கு உண்மையாக தீர்வுகளை கண்டுபிடிப்பதை விட ஒருவரை ஒருவர் குறை கூறுவது எளிது.

இதன் ஆங்கில மூலமான பதிவை கீழுள்ள லிங்கில் பெறலாம்.


Thanks - Dr. Ziyad Aia


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe